சட்டை கூட கலையாமல்.. 500 கோடி வசூலிக்க ரஜினியால் மட்டுமே முடியும்!..

 
allu arjun

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தைப் பாராட்டி டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தைப் பார்த்த அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தளப் பதிவில், ஜெயிலர் 2 திரைப்படம் ரஜினி சாரின் ஸ்டார் பவர், ஸ்டைல் மற்றும் திறமையை வெளிப்படுத்தும் படமாக உள்ளது. சிறந்த கமர்ஷியல் என்டர்டெய்னர் படமான இது ரசிகர்களின் உற்சாகத்தைத் தொடர்ந்து அதிகரிக்கும் என்று பாராட்டியுள்ளார்.

மேலும், அனிருத் மற்றும் படக்குழுவினர்களை பாராட்டிய அவர், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை சிறந்த ஷோமேன் என்றும் புகழ்ந்துள்ளார். மேலும், சட்டை கூட கலையாமல் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்வது ரஜினி சாரால் மட்டுமே முடியும் என்றும் கூறியுள்ளார்.

Tags

From Around the web