1. Home
  2. Latest News

கொச்சையா எடுக்க வேண்டாம்.. அஜித் விஜய்க்கு இருந்தும் விக்ரமுக்கு? அமீர் பேச்சு

vikram

துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் விழா சமீபத்தில் நடந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றது. தென் மாவட்டத்தை சார்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த விழாவிற்கு பா.ரஞ்சித், அமீர் உட்பட பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். பைசன் படம் துருவ் விக்ரமுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் எப்படி ஆரம்பத்தில் ஒரு சரியான வெற்றி கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தாரோ அதே போல்தான் துருவ் விக்ரமுக்கும் அப்படியொரு படம் இதுவரை அமையவில்லை.

சேது படத்தின் மூலம் டேக் ஆஃப் ஆன விக்ரம் மாதிரியே துருவ் விக்ரமுக்கும் பைசன் படம் அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த நிலையில் அமீர் அந்த விழாவில் பேசும் போது விக்ரமை பற்றி அவருடைய நினைவலைகளை பகிர்ந்தார். அமீரும் விக்ரமும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்கள். இப்படி சொல்றேனு கொச்சையாக எடுக்க வேண்டாம். சேது படத்தின் வெற்றிக்காக விக்ரம் காத்துக் கொண்டிருந்தார்.

சேது படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே டப்பிங் பேசவும் சென்று விடுவார். அப்போது கூட பிரபுதேவாவுக்காக ஒரு படத்தில் டப்பிங் பேச சென்றார். ஒரு சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியலுக்காக ஸ்கிரிப்ட் நாங்கள் இருவரும் சேர்ந்துதான் ரெடி பண்ணி கொண்டிருந்தோம். எப்பொழுதுமே விக்ரம் நான் சினிமாவில் ஜெயிப்பேனா என்று தான் கேட்டுக் கொண்டிருபபார்.

உனக்கென்ன? நீ நல்லா அழகாக இருக்குற. அஜித் விஜய்க்கு ஃபேன்ஸ் அதிகம். அப்படியிருந்தாலும் இந்த சினிமாவில் கடைசி வரைக்கும் நீ இருப்ப-னு சொல்வேன் என அமீர் அந்த மேடையில் கூறினார். அவர் சொன்னதை போல விஜய் அஜித் அளவுக்கு மாஸ் இல்லைனாலும் அவருக்கென ஒரு தனி இடம் இந்த சினிமாவில் இருக்கத்தான் செய்கின்றது. விக்ரம்னாலே ஒரு தனி மதிப்புதான். அந்த வகையில் அவருடைய மகனும் ஜெயிப்பாரா என்பதை பார்ப்போம்.