×

நடிகர் ஆனந்தராஜின் தம்பி விஷம் அருந்தி தற்கொலை...
 

35 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் ஆனந்தராஜ். தொடக்கத்தில் வில்லனாக தனது கலைப்பயணத்தை துவங்கிய அவர் நூற்றுக்கணக்கான படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
 

அதன்பின் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இனைத்துகொண்டார். அவரின் மறைவுக்கு பின் அரசியலில் இருந்து விலகி முழு நேர நடிகராக மாறினார். தற்போது காமெடி கலந்த வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இந்நிலையில், புதுச்சேரியில் திருமுடிநகரில் வசித்து வந்த அவரின் சகோதரர் கனகசபை திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். ஏலச்சீட்டு நடத்தி வந்த அவர் அதில் ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிகிறது. 

இந்த சம்பவம் ஆனந்தராஜின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News