என் பொண்ண பத்தி தப்பு தப்பா பேசாதீங்க!.. நடிகர் அர்ஜூன் விளக்கம்...
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களிலும் நடித்தவர் ஆக்சன் கிங் அர்ஜுன். தமிழில் ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு முக்கிய திரைப்படங்களாக அமைந்தன. இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பாதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அது நடந்து சில வருடங்களான நிலையில் சமீபத்தில் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் வெளிநாட்டில் நடந்தது. அதில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா இந்த திருமணத்தில் கலந்துகொண்டார். ஆனால், அவரின் கணவர் பூபதி கலந்து கொள்ளவில்லை..
இதையடுத்து, ஐஸ்வர்யாவும், உமா பதியும் பிரிந்து வாழ்வது வருவதாகவும், ஐஸ்வர்யாவுக்கு மதுப்பழக்கம் உண்டு எனவும், இதை உமாபதி கண்டித்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் பேசியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள நடிகர் அர்ஜுன் தன் மகள் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தவறாத சிலர் பேசுகிறார்கள்.. அதில் உண்மை இல்லை.. இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறோம். இதையும் மீறி பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அர்ஜுன் அதில் கூறியிருக்கிறார்..
ஒரு தந்தையாக எனது மகளையும், அவரது குணத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையும் குறி வைத்து ஆதாரமற்ற மற்றும் மிகவும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
