கன்னட சினிமாவின் மூலம் முதன் முதலாக சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகை குஷ்பு. இவரை அறிமுகம் செய்து வைத்ததே அர்ஜுன் தான் தானாம். அதன் பின் படிப்படியாக வளர்ந்து தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தார். எல்லா மொழி படங்களிலும் நடித்து வெற்றி கொடி நாட்டியவர் நடிகை குஷ்பு.
உடல் அழகு ஒரு பிரச்சினையே இல்லை என்பதை தன் நடிப்பு மூலம் அதை நிரூபித்துக் காட்டியவர். பப்ளி போன்று இருந்தாலும் நடிப்பு, நடனம் ஆகியவற்றால் கோலோச்சியவர் நடிகை குஷ்பு. இவர் கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
ஒரு சமயம் மிகவும் கொடி கட்டி பறந்த நடிகர் அர்ஜுன் அவரது படவாய்ப்புகள் குறைந்த நிலையில் தானே ஒரு படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். ஆனால் தயாரிப்பாளரோ அந்த சமயம் பிரபலமாக இருந்த குஷ்பு வந்து நடித்தால் தான் நான் பணத்தை போடுவேன் என்று சொன்னாராம். ஆனால் குஷ்புவிற்கோ ஏகப்பட்ட படங்கள் கையில் இருக்க தன்னை அறிமுகம் செய்து வைத்த அர்ஜுனுக்காக நேரம் எதுவும் பார்க்காமல் அந்த படத்தில் நைட்டில் மட்டும் ஷார்ட் ரெடி பண்ணி நடித்து கொடுத்து விட்டு போனாராம்.
அந்த படம் தான் “சேவகன்”. படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன் பின் அர்ஜுனுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வர ’ஜெய்ஹிந்த்’ படத்திலும் நடித்து அந்தப் படமும் சொல்ல முடியாத அளவிற்கு வெற்றி பெற்றது. உரிய நேரத்தில் நடிகை குஷ்பு வந்து தன் நன்றிக்கடனை இந்த படத்தின் மூலம் செய்தது அர்ஜுனுக்கு மறுஜென்மம் எடுத்தது போல் இருந்தது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…