மச்சான்.... சொல்லாம இருக்க முடியல - அர்ஜுனிடம் ரகுவரன் கூறிய விஷயம்!

 
arjun raguvaran

முதல்வன் திரைப்படம்: 

பிரம்மாண்ட இயக்குனராக பெயர் பெற்ற சங்கர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் முதல்வன். இத்திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் ஹீரோவாக நடிக்க அவருடன் வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார் .

muthalvan

மேலும், அர்ஜுனின் ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இவர்களுடன் லைலா, மணிவண்ணன், வடிவேலு, கலைராணி, விஜயகுமார், பாத்திமா பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள் .

நேர்காணல் காட்சி: 

இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இந்த திரைப்படத்திற்கான மவுஸ் ரசிகர்களிடையே இன்னும் அப்படியே தான் இருக்கிறது. சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து தாவெகா கட்சி ஆரம்பித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல் தேர்தலிலேயே முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார்.

இந்த சமயத்தில் முதல்வன் திரைப்படத்தை ஒப்பிட்டு விஜய்யின் அரசியல் வாழ்க்கையை பலரும் எடுத்துக்காட்டாக கூறி வருகிறார்கள். இப்படியான சமயத்தில் நடிகர் அர்ஜுன் முதல்வன் படத்தின் அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் .

muthalvan


சொல்லாம இருக்க முடியல:

அப்போது முதல்வன் திரைப்படத்தில் மிக முக்கியமான காட்சியாக பார்க்கப்பட்டது அந்த நேர்காணல் காட்சிதான். அந்த சீன் பக்காவாக வர வேண்டும் என்று இயக்குனர் சங்கர் ரொம்பவும் மெனக்கெட்டு எடுத்தார் .

அந்த சீனை மூன்று நாள் நாங்கள் எடுத்திருந்தோம். அந்த சீன் நல்லபடியாக நாங்கள் எதிர்பார்த்த மாதிரி வந்துருச்சு. பொதுவா ரகுவரன் போன் பண்ணி எல்லாம் யார் கிட்டயும் பேசவே மாட்டார். ஆனால் அன்னைக்கு நைட்டு அந்த காட்சி முடித்ததற்கு அப்புறமா எனக்கு போன் பண்ணி மச்சான் அந்த சீன்ல நீங்க ரொம்ப நல்லா பண்ணி இருந்தீங்க சொல்லாம இருக்க முடியல அதான் போன் பண்ணேன் என்று கூறினார் என்று அர்ஜுன் தெரிவித்துள்ளார். 

Tags

From Around the web