அந்த பையன பார்த்த உடனே பிடிச்சிடுச்சு... மருமகன் ஆனது குறித்து அர்ஜுன்!

 
arjun umapathy

தேசப்பற்று மற்றும் நாட்டு பற்று குறித்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக பார்க்கப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன். இவருக்கு 63 வயதாகியும் பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன் ஃபிட்டாக அதே இளமையோடு இருக்கிறார். 

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் அர்ஜுனனின் திரைப்படத்தில் முதல்வன் திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் திரைப்படமாகும். அவருக்கான அடையாள திரைப்படமாகவும் கூறப்பட்டு வருகிறது .

arjun aishwarya

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தனது மருமகன் உமாபதி ராமைய்யா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நான் அந்த பையன ஒரு நிகழ்ச்சியில் தான் சந்தித்தேன். பார்த்த உடனே அந்த பையனை எனக்கு மிகவும் பிடித்து விட்டது .

காரணம் நல்ல ஃபிட்டான உடல், கலகலப்பான பேச்சு இது தான் அவரிடம் பார்த்து நான் ரசித்தேன். ஆனால் பிறகு தான் என் மகள் ஐஸ்வர்யா அவரை காதலிக்கிறார் என்ற விஷயம் தெரியவந்தது.  என்னுடைய வீட்டார் என்னிடம் இதனை சொன்னார்கள் .

இது எப்படி கனெக்சன் ஆச்சு? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னுடைய மகளுக்காக நான் அவரை ஏற்றுக் கொண்டேன். என் மகளுக்கு அவளுடைய வாழ்க்கையை முடிவெடுக்க உரிமை உள்ளது. அவர்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என நடிகர் அர்ஜுன் ஒரு தந்தையாக சிறப்பா முடிவெடுத்துள்ளதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
 

Tags

From Around the web