நடிப்பை விட்டு ஆக்டிங் டிரைவர் வேலை பார்க்க நினைச்சேன்!.. அர்ஜூன் சொல்லும் பிளாஷ்பேக்..
துவக்கத்திலேயே ஆக்சன் ஹீரோவாக அறிமுகமானவர் அர்ஜுன். தொடர்ந்து பல படங்களில் ஆக்சன் ஹீரோவாக நடித்ததால் இவருக்கு ஆக்சன் கிங் என்கிற பட்டமும் கிடைத்தது. பல ஹிட் படங்களை கொடுத்து முன்னேறினார் அர்ஜூன்.
ஆனால், ஒரு கட்டத்தில் இவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனபோது சொந்த தயாரிப்பில் அவரே திரைப்படங்களை இயக்கத் தொடங்கி அதில் அவரே ஹீரோவாக நடித்தார். அப்படி வெளியான ஜெய்ஹிந்த், பிரதாப் போன்ற திரைப்படங்கள் வெற்றியை பெற்று அர்ஜுன் கம் பேக் கொடுக்க காரணமாக அமைந்தன..
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து வெளியான முதல்வன் திரைப்படம் அர்ஜுனை ஒரு முக்கிய நடிகராக மாற்றியது. கோட் படத்தில் விஜயுடனும், விடாமுயற்சி படத்தில் அஜித்துடனும் இணைந்து நடித்திருந்தார் அர்ஜுன். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘என் வாழ்வில் குறிப்பிட்ட காலத்தில் தொடர்ச்சியான நிதி நெருக்கடி ஏற்பட்டு என்னிடம் இருந்த சொத்துக்களை கூட விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். பணம் அனைத்தும் நஷ்டமாகிவிட்டது. எனக்கு நன்றாக வண்டி ஓட்ட தெரியும் அதனால் நடிப்பை கைவிட்டு விட்டு பேசாமல் டிரைவிங் வேலைக்கு சென்று செல்லலாம் என்று கூட யோசித்தேன்.
அத்தனை தோல்விகளுக்கு பிறகும் ‘நீ ஒரு நல்ல படம் கொடுத்தால் நாங்கள் பார்க்க தயாராக இருக்கிறோம்’ என்று ரசிகர்கள் என் மீது வைத்து நம்பிக்கையை என்னை மீண்டும் சினிமாவில் நிலை நிறுத்தியது.. இந்த நேரத்தில் எனக்கு ஆதரவு அளித்த பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என ஃபீலிங்காக பேசியிருக்கிறார் ஆக்சன் கிங் அர்ஜூன்.
