×

எல்லாம் போச்சே!.. ஓடிடிக்கு போனா இதான் பிரச்சனை!...தலையில் அடித்துக்கொள்ளும் ஆர்யா....

 
arya

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்து அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் ரசிகர்களை மிகவும் கவந்துள்ளது. திரைப்பட விமர்சகர்களும் இப்படத்தை மிகவும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக இப்படத்தில் அமைக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது கபிலன், வெற்றி, டான்ஸிங் ரோஸ், ரங்கன் வாத்தியார், வேம்புலி, மீரான், மாஞ்சா கண்ணன், மாரியம்மா, கெவின் டாடி என கதாபாத்திர படைப்புகளை ரஞ்சித் சிறப்பாக அமைத்துள்ளார். அவர்களும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். இப்படத்திற்கு Film companion எனும் நிறுவனம் சார்பாக சிறந்த படத்திற்கு வழங்கப்படும் FC GOLD என்கிற அங்கீகாரமும் கிடைத்துள்ளது. 

arya

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் மீண்டும் வெளியாகிறது என செய்திகள் வெளியாகி வருகிறது. இப்படத்தை ஆர்யாவும், ரஞ்சித்தும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. மேலும், இப்படத்தை தியேட்டரில் வெளியிடும் உரிமை தங்களுக்கு கொடுக்குமாறு கேட்டுள்ளது. ஆனால், இப்படத்தில் தியேட்டரில் வெளியிடக்கூடாது என்பதுதான் நம் ஒப்பந்தம். எனவே, நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என அமேசான் ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எனவே, பல கோடி வருமானம் போச்சே என தலையில் கை வைத்து உட்கார்ந்துள்ளாராம் ஆர்யா...

From around the web

Trending Videos

Tamilnadu News