Connect with us
dhanush

Cinema News

தனுஷ் வீட்டுக்கு அடிக்கடி சரக்கு அடிக்கப் போகும் பிரபலம்! தகாத வார்த்தையில் பேசிய செல்வராகவன்

Dhanush Selvaraghavan: தமிழ் சினிமாவில் இன்று ஒரு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்த நிற்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தனுஷ் அதனைத் தொடர்ந்து பல நல்ல கதைகளில் நடித்து சினிமாவிற்குள் வந்த குறுகிய காலத்திலேயே மக்களின் அபிமானங்களை பெற்ற நடிகராக மாறினார்.

இதற்கு முழு முதல் காரணமாக இருந்தவர் அவருடைய அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன். அவர்தான் இவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது. துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு காதல் கொண்டேன் திரைப்படத்திலும் ஒரு வித்தியாசமான கேரக்டரில் தனுஷை நடிக்க வைத்ததன் மூலம் இவருக்கும் நடிப்பு வரும் என்ற ஒரு நம்பிக்கையை மக்களிடையே திணித்தவர் செல்வராகவன்.

இதையும் படிங்க: உலக நாயகனுக்கே பயமா…? தன்னைத் தக்க வைக்கப் போராடும் கமல்…! வேறு கோணத்தில் சிந்தித்த பிரபலம்..!

அதிலிருந்து பல சவாலான கேரக்டர்களை ஏற்று நடித்து இன்றுவரை ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி அதையும் தாண்டி ஹாலிவுட் என உலக அளவில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார் தனுஷ் .தற்போது தனுஷ் அவருடைய ஐம்பதாவது படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது .

இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் பாவா லட்சுமணன் செல்வராகவனை பற்றி ஒரு தகவலை பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். செல்வராகவன் இயக்கி தனுஷ் நடித்த படம் புதுப்பேட்டை. அந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் முதலில் நடித்திருந்தாராம் பாவா லட்சுமணன். கதைப்படி தனுஷின் அப்பாவுக்கு நண்பராக வருவார் பாவா லட்சுமணன்.

இதையும் படிங்க: டெரர் இயக்குனர் படத்தில் நடிகையை கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட சூர்யா!.. இவ்வளவு கஷ்டப்பட்டாரா!…

அப்போது தனுஷ் வீட்டுக்கு அடிக்கடி அவர் அப்பாவுடன் சேர்ந்து குடிக்க வருவாராம். குடித்துக் கொண்டிருக்கும் போது தனுஷின் அம்மாவை சைட் அடிப்பதும் அவரை ஆம்லெட் போட சொல்வது மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்தாராம் பாவா லட்சுமணன். சொல்லப்போனால் புதுப்பேட்டை படத்தில் பாவா லட்சுமணனால்தான் ஒரு பெரிய ரவுடியாக மாறுவாராம் தனுஷ். ஆனால் இந்த காட்சிகள் எல்லாம் அதில் இப்போது இல்லை.

ஒரு 20 நாட்கள் படத்தில் நடித்தாராம் பாவா லட்சுமணன். அந்த காட்சியை போட்டு பார்த்த செல்வராகவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். மானிட்டரில் பார்க்கும்போதே கத்தி விட்டாராம். இவனை எல்லாம் யாரு நடிக்க கூட்டிட்டு வந்தா என்றபடி தகாத வார்த்தையில் திட்டி தீர்த்து விட்டாராம். செல்வராகவன் அதுவும் தனியாக என்னிடம் சொன்னால் ஓகே .அத்தனை பேர் முன்னிலையில் என்னை கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டார் செல்வராகவன். அதனால் அந்த படத்தில் இருந்து நான் விலகிக் கொண்டேன் என பாவா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: டெடிகேஷனா இருக்க இப்படியா? விஜய் சேதுபதியின் கேரவனுக்குள் போய் பார்த்ததும் ஷாக் ஆன அபிராமி

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top