வடிவேலு பத்தி கேட்காதீங்க!.. அவர் எனக்கு எம்.ஜி.ஆர் மாதிரி!.. பாவா லட்சுமணன் ஃபீலிங்!..

 
bava lakshmanan

மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் பாவா லட்சுமணன். அந்த நிறுவனம் தயாரித்த சொல்லாமலே திரைப்படத்தில் ஒரு சின்ன காட்சியில் நடித்தார். அதன்பின் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். கடந்த 30 வருடங்களில் பல திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வடிவேலு நடித்த ஏராளமான படங்களில் அவரோடு இணைந்து காமெடி காட்சிகளில் பாவா லட்சுமணன் நடித்திருக்கிறார்..

கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்ட பாவா லட்சுமணன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். மேலும், சர்க்கரை நோய் காரணமாக அவரின் காலில் சில விரல்களும் அகற்றப்பட்டிருக்கிறது. திரையுலகினர் தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து கே.பி.ஒய் பாலா, லெஜென்ட் சரவணா உள்ளிட்ட சிலர் அவருக்கு உதவி செய்தனர்.. தமிழக அரசு சார்பில் சமீபத்தில் அவருக்கு ஒரு வீடும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், லெஜெண்ட் சரவணா ரசிகர் மன்றம் தொடர்பான விழாவில் பேசிய பாவா லட்சுமணன் ‘நான் வடிவேலுவுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன்.. ஆனால் அவர் எனக்கு எந்த உதவியும் பண்ணவில்லை.. அவரை பத்தி என்னிடம் கேட்காதீங்க.. ஆனால் லெஜெண்ட் சார் நான் நேர்ல கூட பார்த்ததில்லை.. அவர் படத்துல நடிச்சதில்ல.. ஆனா அவர் எனக்கு பெட், மிக்ஸி, கிரைண்டர் என வீட்டுக்கு உபயோக பொருட்கள் அனைத்தையும் கொடுத்திருக்கிறார்.. லெஜண்ட் சார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாதிரி.. அவர் செஞ்ச உதவியை நான் மறக்க மாட்டேன்.. அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன்’ என கூறியிருக்கிறார்.

Tags

From Around the web