×

செக் மோசடி வழக்கில் சிக்கிய நடிகர்.. நீதிபதி கொடுத்த நூதன தண்டனை...

மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர்  நடிகர் ரிஸாபாவா. தமிழ் திரைப்படங்களில் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்படும் போது டப்பிங் குரலும் கொடுப்பவர்.
 

இவர் 2014ம் ஆண்டு சாதிக் என்பவரிடம் ரூ.11 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.  ஆனால், அந்த பணத்தை காசோலை மூலம் திருப்பிக்கொடுத்தார். ஆனால், வங்கியில் அவரது கணக்கில் போதிய பணம் இல்லாமல் அது திரும்பி வந்துவிட்டது. எனவே, சாதிக் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், நீதிமன்றம் கெடு விதித்த பின்னரும் அவர் பணத்தை சரியான நேரத்தில் கொடுக்கவில்லை. எனவே, அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. எனவே, ரிஸாபா நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.11 லட்சத்தை செலுத்தினார். ஆனாலும்,  விதிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் அவர் பணத்தை செலுத்த தவறியதற்காக நீதிமன்றம் முடியும் வரை அவர் அறையில் காத்திருக்க வேண்டும் என நூதன தண்டனையை நீதிபதி அவருக்கு வழங்கினார். எனவே, ரிஸாபாவும் மாலை வரை ஒரு அறையில் இருந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி சென்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News