Categories: latest news throwback stories

பாக்கியராஜோட அந்த மெகா ஹிட் படத்துக்கு இன்ஸ்பிரேஷன் யாருன்னு தெரியுமா? அடடே அவரா?

தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்திலேயே தனது அதீத நகைச்சுவை உணர்வால் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் சந்திரபாபு. இவருக்கு உள்ள வரவேற்பைக் கண்டு பெரிய பெரிய நடிகர்களே அஞ்சினர். அந்த வகையில் இவருடைய நகைச்சுவை ஆளுமையைக் கண்ட தயாரிப்பாளர்கள் படத்தில் இவருக்கும் தனிப்பாடல் வைத்தனர்.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

andha 7 naatkal

அந்தப் பாடலையும் இவரே சொந்தக்குரலில் பாடி அசத்தினார். அப்படிப் பல பாடல்கள் தத்துவங்களைக் கொண்டும் வந்து ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்புக்குள்ளாயின. அந்த வகையில் ‘ஒண்ணுமே புரியல உலகத்துல’, ‘வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை’ ஆகிய பாடல்களைச் சொல்லலாம்.

Also read: அப்பா உன்ன நெனச்சு பெருமைப்படுவாரு!.. எஸ்.கே பகிர்ந்த வாழ்த்து செய்தி.. யாருக்கு தெரியுமா?..

நடனத்திலும் பட்டையைக் கிளப்புவார் சந்திரபாபு. ‘குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’ பாடல் அந்தக் காலத்தில் இவரது நடனத்துக்கு ரொம்பவே பிரபலமான பாடலாக வலம் வந்தது.

சொந்த வாழ்க்கை

actor chandrababu

இந்தப் பாடலை மேடைகளிலம் பல கலைஞர்கள் அரங்கேற்றம் செய்து வந்தனர். சந்திரபாபுவின் காமெடியை அனைத்துத் தரப்பு ரசிகர்களுமே ரசிக்க ஆரம்பித்தனர். இவர் பேசுவதை விட பாடிலாங்குவேஜிலயே அனைவரையும் கவர்ந்து இழுத்தார். இவர் படங்களில் நம்மை சிரிக்க வைத்தாரே தவிர இவரது சொந்த வாழ்க்கை அவருக்கு திருப்திகரமாக அமையவில்லை என்றே சொல்லலாம். என்ன நடந்ததுன்னு பாருங்க.

நகைச்சுவை மன்னர்

தமிழ்சினிமாவில் ‘நகைச்சுவை மன்னர்’ என்று அழைக்கப்பட்டவர் நடிகர் சந்திரபாபு. அவருடைய திருமண நாளன்று முதல் இரவில் அவரது மனைவி வேறொருவரைக் காதலிப்பதை அறிந்து கொண்டாராம். அந்த வகையில் பெருந்தன்மையாக சந்திரபாபு அவரது மனைவியையும் அந்தக் காதலியையும் இணைத்து வைத்துள்ளார்.

அவரது இந்த சோகக்கதையை அடிப்படையாகக் கொண்டு தான் ‘அந்த ஏழு நாள்கள்’ படமே உருவானதாம். இதை பாக்கியராஜே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

திருமணம்

chandrababu sheela

1958ம் ஆண்டு சந்திரபாபு ஷீலா என்ற பெண்ணை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தனது மனைவி மகிழ்ச்சியாக இல்லை என்பதை புரிந்து கொண்டார். இதுகுறித்து மனைவியிடம் அவர் கேட்கும்போது அவர் ஏற்கனவே ஒருவரைக் காதலித்து வருவதாகவும், அவரை மறக்க முடியாமல் கண்ணீர் வடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மனைவியின் காதலின் ஆழத்தைப் புரிந்து கொண்ட சந்திரபாபு அவர் காதலித்த அந்த நபரிடமே விட்டுவிட்டாராம்.

குடிப்பழக்கத்துக்கு அடிமை

அதுமட்டுமல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துள்ளார். அந்த நாள்களில் சந்திரபாபு திருமணமே செய்து கொள்ளாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v