போயஸ்கார்டனில் புது வீடு கட்டும் தனுஷ் - வைரலாகும் பூமி பூஜை புகைப்படங்கள்
Wed, 10 Feb 2021

நடிகர் தனுஷுக்கு ஏற்கனவே சொந்த வீடு உள்ள நிலையில் போயஸ் கார்டனில் அவரின் மாமனாரும், நடிகருமான ரஜினி மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு அருகே ஒரு புதிய வீட்டை கட்டவுள்ளார். இதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில், தனுஷ், ரஜினி, லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீட்டின் மதிப்பு ரூ.20 கோடிக்கும் மேல் எனக்கூறப்படுகிறது.