Categories: Cinema News latest news

சிம்புன்னா ஓகே…தனுஷுக்கு நோ…ஒரவஞ்சனை காட்டும் சிவகார்த்திகேயன்…திட்டும் ரசிகர்கள்…

சிவகார்த்திகேயன் மெரினா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அவரை தூக்கிவிட்டது தனுஷ்தான்.

அவர் நடித்த 3 படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் அவரை ஹீரோவாக வைத்து எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய திரைப்படங்களை தயாரித்தார். எதிர்நீச்சல் திரைப்படத்தின் வெற்றியே தயாரிப்பாளர்கள் பார்வை சிவகார்த்திகேயன் மீது படுவதற்கு காரணமாக இருந்து.

அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என சிவகார்த்திகேயன் மெகா ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறி தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி கொண்டார். அதேபோல், தனுஷ் – அனிருத் கூட்டணி உடைந்து, சிவகார்த்திகேயன் – அனிருத் கூட்டணி உருவாகி பல ஹிட் பாடல்களும், படங்களும் வெளிவந்தது.

இதன் காரணமாக தனுஷ் – அனிருத் இடையேயான நட்பு முறிந்தது. அதேபோல், சிவகார்த்திகேயனுக்கும், தனுஷுக்கும் இடையே இருந்த நட்பும் முறிந்து போனது. பல வருடங்கள் கழித்து தனுஷ் படமான திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆனால், தனுஷ் – சிவகார்த்திகேயன் இடையேயான நடிப்பு மீண்டும் ஓட்டவே இல்லை.

பொதுவாக முக்கிய நடிகர்கள் படம் வெளியானால் அவர்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து சொல்வது சிவகார்த்திகேயனின் வழக்கம். சிவகார்த்திகேயனை கிண்டலடித்த அருண் விஜய் நடித்த யானை படம் வெளியான போது கூட சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ வெளியான போது அவர் டிவிட்டரில் அதற்கு வாழ்த்து கூறவே இல்லை.

ஆனால்,சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு அவர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனால் கடுப்பான தனுஷ் ரசிகர்கள் ‘சிம்புவுக்கு வாழ்த்து சொல்லனும்னு தோணுது. ஆனா தனுஷுக்கு தோணல, திருச்சிற்றம்பலம் ஃபிளாப் ஆகும்னு நினச்ச..ஆனா ஓடிடுச்சி..அதுக்குதான் ஆடக்கூடாது…நன்றியோட இருக்கணும்…கடவுள் பாத்திக்கிட்டு இருக்கான்’ என பதிவிட்டு வருகின்றனர்.

 

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா