Dhanush: காதல் ஒன்னுமில்ல!. வெறும் பில்டப்!.. தத்துவம் சொல்லும் தனுஷ்...
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் தனுஷும் ஒருவர். துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க துவங்கிய தனுஷ் 50 படங்களை தாண்டி விட்டார். ஒருபக்கம் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் சில தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார், இரண்டு முறை தேசிய விருதும் வாங்கியிருக்கிறார். துவக்கத்தில் காதல் விஷயத்தில் அவர் சைக்கோவாக இருப்பது போல அவரின் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களை பார்த்தால் இது புரியும்.
காதல் கலந்த ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் போன்ற இயக்கங்களுடன் கைகோர்த்து பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்ற படங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகனாக மாறினார். நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் 17 வருடங்களுக்கு பின் இருவரும் கருத்து வேறுபட்டால் பிரிந்து விட்டனர்/ தற்போதும் இருவரும் பிரிந்து தனித்து வாழ்கிறார்கள்.

தனுஷ் தற்போது ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் நடந்த ஒரு பட விழாவில் ‘காதலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு ‘எனக்கு தெரியாது.. அது வெறும் மிகைப்படுத்தப்பட்ட ஒரு உணர்வு.. வெறும் பில்டப்.. ஓவர்ரேட்டட் எமோஷன்’ என பதில் அளித்திருக்கிறார் தனுஷ். விவாகரத்துக்கு பின் அவருக்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தனக்கு காதல் மேல் எந்த நம்பிக்கையும் இல்லை என தத்துவம் பேசி இருக்கிறார் தனுஷ்.
ஆனால் அதே தனுஷ் தனது திரைப்படங்களில் காதல் காட்சிகளை மட்டும் வைத்து பணம் சம்பாதித்து வருகிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
