மகனை ஹீரோவாக களமிறக்கும் தனுஷ்!.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்!…

 
மகனை ஹீரோவாக களமிறக்கும் தனுஷ்!.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்!…

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர். வுண்டர்பார் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களையும் தனுஷ் தயாரித்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் நஷ்டத்தை சந்தித்ததால் தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடிவிட்டார் தனுஷ். தற்போது அந்த நிறுவனத்தை மீண்டும் தூசி தட்டி மீண்டும் திறந்திருக்கிறார் தனுஷ்.

அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தை தனுஷின் வுண்டர் பார் தயாரிப்பு நிறுவனமே ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்கவுள்ளது. மேலும், சின்ன பட்ஜெட்டுகளில் படங்களை தொடர்ந்து தயாரிக்கவும் தனுஷ் திட்டமிட்டுள்ளாராம். அதில் முதல் படமாக தனது மகன் யாத்ராவை ஹீரோவாக போட்டு ஒரு படத்தை தனுஷே இயக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

மகனை ஹீரோவாக களமிறக்கும் தனுஷ்!.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்!…

இதைத்தொடர்ந்து, இன்று தனுஷ் மகன் யாத்ராவை அழைத்துக்கொண்டு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனமும் செய்திருக்கிறார்.. தமிழ் சினிமாவில் மகன் யாத்ரா ஒரு நிலையானது இடத்தைப் பிடிக்க வேண்டும் என மனம் உருகி வேண்டியிருக்கிறாராம். விரைவில் இந்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக நடிக்கவைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற திரைப்படத்தை தனுஷ் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web