vaarisu thunivu
தமிழ் சினிமாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம். போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் துணிவு. தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் வாரிசு.
vijay ajith
இந்த இரு படங்களும் வருகிற பொங்கல் அன்று ஒன்றாக ஒரே தேதியில் ரிலீஸ் ஆக இருக்கின்றது. ஆரம்பத்தில் இருந்தே இவ்விரு படங்களுக்கும் மறைமுகமாக போட்டி இருந்து கொண்டே இருந்தது. போஸ்டர் வெளியிடுவதில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக இரு படங்களும் மோதிக் கொண்டு தான் இருந்தன.
இதையும் படிங்க : பிரபுவை சிவாஜி என்னவாக பார்க்க ஆசைப்பட்டார் தெரியுமா?… இப்படி ஒரு கனவு அவருக்கு இருந்ததா!..
இது ஒரு பக்கம் இருக்க ரசிகர்களும் இணையம் வாயிலால தகாத வார்த்தைகளால் மாறி மாறி வசை பாடி வருகின்றனர். இந்த நிலையில் துணிவு படத்திற்காக நடிக்க போய் கடைசியில் வாரிசு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த ஒரு நடிகர் தான் இப்பொழுது டிரெண்டாகி வருகிறார்.
vijay ajith
அவர் வேறு யாருமில்லை. கணேஷ் வெங்கட். அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் கணேஷ் வெங்கட். துணிவு படத்தின் ஒரு ரோலுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. உங்களை ஷார்ட் லிஸ்ட் செய்து வைத்திருக்கிறோம் . கொஞ்சம் காத்திருங்கள் என்று சொல்லி காத்திருக்க வைத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆன நிலையில் படத்தில் சில மாற்றங்களை செய்தும் இவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்திலும் மாற்றத்தை செய்திருக்கிறார்கள். அதன் பின் கணேஷிடம் நீங்கள் செட் ஆக மாட்டீர்கள் என்று கூறிவிட்டனராம். அதன் பின் சரியாக ஒரு வார காலத்தில் கணேஷுக்கு வாரிசு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம்.
ganesh
மனுஷனுக்கு ஒரே சந்தோஷம். ஒரு கதவு மூடினால் மறு கதவை கடவுள் திறப்பார் என்று சொல்வது என் கதையில் உண்மையாகி விட்டது என்று மகிழ்ச்சியில் பேசினார் கணேஷ் வெங்கட். வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் கணேஷ் வெங்கட்.
Manikandan: எந்த…
Ajith: நடிகர்…
Idli kadai:…
Idli kadai…
Kantara 2:…