×

ஊரடங்குல இப்படி ஆயிட்டாரே!.. புது லுக்கில் நடிகர் கவின்.. வைரலாகும் புகைப்படம்...

 

சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தின் மூலம் வெளிவுலகுக்கு அறிமுகமானவர் கவின். இவரது இந்த கதாபாத்திரம் பெண்களுக்கு மிகவும் பிடித்ததாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வேலை வெட்டி இல்லாத சண்டியராக கெத்தாக இருக்கும் ஒருவனாக அதில் நடித்திருப்பார் கவின்.

இதன் மூலம் அவருக்கு பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அபிராமி, சாக்ஷி பின்னர் லாஸ்லியா என இளம் பெங்களுடன் கடலை போட்டே படுபேமஸ் ஆகினார். இதையடுத்து கவின் ஆர்மி உருவாகி இன்னும் அவரது புகழை ஓங்கி ஒலித்தனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். கொரொனா ஊரடங்கால் முடியை வெட்டாமலும், தாடி வளர்த்து வந்த அவர் தற்போது ஒரு புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். அதற்கு ‘சில நாட்களுக்கு பின்’ என கேப்ஷன் வைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News