சூர்யா படத்தில் மிரட்டிய இந்திரன்.. இப்போ தனுஷ் படத்திலும் கன்பார்ம்
கர படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள படம் D55. பெயரிடப்படாத அந்த படத்தை அமரன் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்த ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார்
May 31, 2026, 13:04 IST
கர படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள படம் D55. பெயரிடப்படாத அந்த படத்தை அமரன் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்த ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடித்து வருகின்றனர். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் தனுஷ்க்கு இந்த படம் நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில் D55 படத்தில் இந்திரன் இணைந்துள்ளார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் இதனை கூறினார். கருப்பு படத்தில் அவரது நடிப்பு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான காடு போன்ற செட் ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
