×

புதுமுகம்...கேரள வரவுதான் வேண்டும்... நடிகரால் புலம்பும் இயக்குனர்கள் 

தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் வாரிசு நடிகர் வைக்கும் கோரிக்கையால் அதிர்ந்துபோய் கிடக்கிறார்களாம் கோடம்பாக்கம் இயக்குனர்கள். 
 
புதுமுகம்...கேரள வரவுதான் வேண்டும்... நடிகரால் புலம்பும் இயக்குனர்கள்

தமிழில் கஷ்டப்பட்டு முன்னணி நடிகரானவர் அந்த வாரிசு நடிகர். தான் நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்துவது அவரது வழக்கம். எந்த கேரக்டர் கொடுத்தாலும், அந்த பாத்திரமாகவே மாறிவிடுவார் என்று நடிகரைப் பற்றி கோலிவுட்டில் பேச்சு உண்டு. இதனால், அவருக்கு நல்ல பெயரும் இண்டஸ்டிரியில் இருக்கிறது. 


ஆனால், நடிகர் சமீபத்தில் எடுத்திருக்கும் முடிவு இயக்குனர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. என்னவென்று விசாரித்தால் அந்த நடிகர், தன்னுடன் ஏற்கனவே நடித்த நடிகைகளுடன் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதுமட்டுமா, புதுமுகமாக கேரளத்து வரவுகள்தான் தன்னுடன் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என இயக்குனர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாராம். இதனால்தான் அவரது சமீபத்திய படத்தில் கூட புதுமுக ஹீரோயின் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். 


பெண்கள் விஷயத்தில் அவர் பெயர் எக்குத்தப்பாக அடிபடுவதால், ஹீரோயின் தேர்வில் தலையிடும் அவரது செயலால் என்ன நடக்கப்போகிறதோ என்று பதறுகிறார்களாம் சில இயக்குனர்கள். வெளியேவும் சொல்ல முடியாமல் சிலர் ஹீரோவால் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News