நான் விட்ட கேப்ல வளர்ந்தவர்கள் - நடிகர் ஜெய் ஆதங்கம்!
நடிகர் ஜெய்:
தமிழ் சினிமாவில் விஜய்க்கு அடுத்தபடியாக குழந்தைகள் ரசிக்கக்கூடிய நடிகராகவும் சாஃப்டான ஹீரோவாகம் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தவர் தான் நடிகர் ஜெய். 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த பகவதி திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்து அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து சென்னை 28 திரைப்படத்தின் மூலமாக நடித்து மாபெரும் வெற்றி கொடுத்தார் .தொடர்ச்சியாக சுப்ரமணியபுரம் ,சரோஜா, வாமனன், கோவா, அவள் பெயர் தமிழரசி ,கனிமொழி ,எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி , திருமணம் எனும் நிக்கா இப்படி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வந்தார்.
மார்க்கெட் இழந்த ஜெய்:
அந்த சமயத்தில் நடிகை அஞ்சலியுடன் காதலில் ஜெய் அவருடன் லிவிங் லைப் வாழ்ந்து தன்னுடைய சினிமா கெரியரை கொஞ்சம் கேப் விட்டு விட்டார் . இதனால் அவரது மார்க்கெட் குறைந்து போய்விட்டது. தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மார்க்கெட் சரிந்ததற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் நடிகர் ஜெய்.
கேப்ல வளர்ந்தவர்கள் - சிவகார்த்திகேயன்:

அப்போது அவர் கூறியதாவது நான் சினிமாவில் சில காலம் கேப் விட்டுவிட்டேன். அந்த கேப்பில் தான் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் மிக நன்றாக நடித்து பெரிய ஹீரோக்களாக வளர்ந்துவிட்டனர். கண்டிப்பாக நானும் சில தவறான முடிவுகளை எடுத்துள்ளேன் என ஜெய் மிகவும் வருந்தி ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார் .
சில ரசிகர்கள் இதை கேள்விப்பட்டு ஆம் நீங்கள் சொல்வது என்னவோ உண்மைதான். நீங்கள் கேப் விடாமல் தொடர்ச்சியாக உங்களது நடிப்பை வெளிக்காட்டிருந்தால் நீங்கள் தான் அவர்களை விட இன்று உச்ச நட்சத்திரமாக இருந்திருப்பீர்கள் என அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்.
