1. Home
  2. Latest News

Vijay Ajith: விஜய் அஜித் எல்லாம் அதுக்கு லாய்க்கே இல்ல.. இவருக்கு ஏன் இவ்ளோ கோவம்?

vijay_ajith
முதலில் சினிமாவில் இருக்குறவங்கள ஒழுங்கா பாத்துக்க, அப்பதான மக்கள் நம்புவான்

தமிழ் சினிமாவில் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் விஜயும் அஜித்தும். ஆனால் இருவரும் இப்போது அவரவருக்கு பிடித்தமான துறையில் பிஸியாக இருக்கிறார்கள். விஜய் அரசியலில் மும்முரமாக இறங்கிவிட்டார். அஜித் அவருடைய நீண்ட நாள் பேஷனான கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில்தான் அஜித்துக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸில் அவரை கௌரவிக்கும் வகையில் விருது கொடுத்து பெருமை படுத்தியிருக்கிறார்கள்.

விஜயும் அஜித்தும் ராஜாவின் பார்வையிலே படத்தில் ஒன்றாக நடித்தனர். அவர்கள் சேர்ந்து நடித்த முதல் படமும் கடைசி படமும் இதுதான். இந்தப் படத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. எப்படி ரஜினியையும் கமலையும் மீண்டும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததோ அதே போல விஜயையும் அஜித்தையும் சேர்ந்து நடிக்க வைக்க எத்தனையோ இயக்குனர்கள் ஆசைப்பட்டனர்.

ஆனால் அது முடியாமல் போய்விட்டது. இன்னொரு பக்கம் அவர்களுடைய ரசிகர்களின் பலம். இருவருக்குமே நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருவருமே சினிமாவில் ஒரு நிலையான இடத்தை தக்க வைக்க மிகவும் போராடினார்கள். என்னதான் விஜய்க்கு சினிமா பின்புலம் இருந்தாலும் ஆரம்பகால படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை.

தன் மகனை பெரிய ஹீரோவாக்கும் முயற்சியில் அவருடைய தந்தை எஸ்.ஏ.சி மிகவும் கஷ்டப்பட்டார். அதே போல்தான் அஜித்துக்கும் அவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் கைகொடுக்கவில்லை. எப்படி விஜய்க்கு பூவே உனக்காக, லவ் டுடே படங்கள் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதோ அதே போல் அஜித்துக்கும் ஆசை, காதல் கோட்டை படங்கள் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

jayamani

அதன் பிறகு இருவருமே எண்ணிப்பார்க்க முடியாத அளவு தங்களது வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். அதன் விளைவு இன்று ரஜினி கமலுக்கு இணையாக அவர்களும் போற்றப்படுகின்றனர். இந்த நிலையில் விஜய் அஜித்தை பற்றி பிரபல காமெடி நடிகர் ஜெயமணி கடுமையாக விமர்சித்திருக்கிறார். எம்ஜிஆர் அளவுக்கு எந்த நடிகர்களும் அரசியலில் வர முடியல. அவருக்கு பிறகு சினிமா நடிகர்களின் நலனுக்காக அக்கறை கொண்டவர் விஜயகாந்த்.ஆனால் இங்க இருக்கிற விஜய் ஆகட்டும் அஜித் ஆகட்டும் எவனும் அதுக்கெல்லாம் லாய்கி இல்லை.

கேரியர கேரவனுக்குள் கொண்டு போய் தனியாக தின்னுட்டு வருவாங்க. எவன் எப்படி போனா என்னனு நினைக்கிறாங்க. முதலில் சினிமாவில் இருக்குறவங்கள ஒழுங்கா பாத்துக்க, அப்பதான மக்கள் நம்புவான் என பேசியிருக்கிறார் ஜெயமணி. 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.