மதுரை சார்ந்த கதையில் ஜீவா நடிக்கும் புதிய படம்
நடிகர் ஜீவா தற்போது புதிய படத்தில் நடிக்க ஒபந்தம் ஆகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிரிக்க முடியாத நாயகர்களில் ஜீவாவும் ஒருவர். இவரது நடிப்பில் சிவா மனசுல சக்தி, கோ, ராம், டிஸ்யூம், கற்றது தமிழ் உள்ளிட்ட பல படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளன. இடையில் சிஅல் படங்கள் தோல்வி அடைந்தாலும் இறுதியாக வந்த தலைவர் தம்பி தலைமையில் நலல் வெற்றியை பெற்றது. தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் 47வது படமாக் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜீவா தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தினை சூரி நடித்த கருடன் மற்றும் மாமன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
மதுரையை மையமாக கொண்ட ஒரு கிராமத்து கதையில் ஜீவா நடிக்கும் இந்த படத்தை கிடா படத்தை இயக்கிய ரா.வெங்கட் இயக்குகிறார். அப்பா - மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
