ஹனிமூன் போன இடத்துல இப்படியெல்லாமா பண்ணாரு? வெரி நாட்டி ஃபெல்லோ ஜான்விஜய்
பல படங்களில் வில்லனாகவும் காமெடி நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜான் விஜய். தன்னுடைய தனித்துவமான குரலாலும் நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு இன்றுவரை பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் இவருடைய கதாபாத்திரம் வெகுஜன மக்களால் பாராட்டப்பட்டது.
பெரும்பாலான படங்களில் போலீஸ் கதாபாத்திரத்திலேயே இவர் நடித்திருப்பார். கபாலி படத்தில் ரஜினியுடன் வரும் கேரக்டராக நடித்திருப்பார். இப்படி கவனம் ஈர்க்கும் கேரக்டர்களிலேயே நடித்து தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் தான் ஜான்விஜய். இந்த நிலையில் இவருடைய ஹனிமூன் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார்.
இவருடைய மனைவி நகரத்திலேயே பிறந்து வாழ்ந்தவராம் .அதனால் ஹனிமூன் போன இடத்தில் கிராமத்து வாசனையை காட்ட வேண்டும் என்பதற்காக கிராமத்து சமையல் மாதிரி காட்டுக்குள் அசைவ உணவை சமைத்துக் கொடுப்போம் என நினைத்து போகும்போது மட்டன், 10 உப்பு பாக்கெட் என சகலமும் வாங்கி சென்றாராம்.
உப்பு பாக்கெட்டுகளை வாங்கும் போதே அவருடைய மனைவி உங்கள் சமையல் இலட்சணம் எப்படி இருக்கும் என்று இப்பொழுதே தெரிகிறது என சொல்லி கிண்டல் அடித்தபடியே ஒரு காட்டுக்குள் சென்று இருக்கின்றனர். அங்கு இருந்த கல்லை அடுப்பாக வைத்து மட்டன் சிக்கன் உணவுகளை சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது பல குரங்குகள் அவர்களை சூழ்ந்து கொண்டதாம்.
சமைத்த உணவுகளை எல்லாம் குரங்குகள் அனைத்தும் எடுக்க வந்திருக்கின்றன. உடனே ஜான்விஜய் தான் வாங்கிய உப்புப் பாக்கெட்டுகளை ஆங்காங்கே குவித்து வைத்து விட்டாராம். உடனே குரங்குகள் அந்த உப்பு பாக்கெட்டுகளின் பக்கம் கவனத்தை செலுத்த அந்த உப்பை முழுவதும் சாப்பிட்ட குரங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அருகில் இருந்த நீர் நிலைகளுக்கு சென்று விட்டதாம்.
இதுதான் வாய்ப்பு என இந்த குரங்குகள் வருவதற்குள் ஜான்விஜய் இந்த உணவுகளை எல்லாம் சமைத்து விட்டதாக அந்த பேட்டியில் கிண்டலாக கூறினார். இதை பார்த்து ரசிகர்கள் தலைவா இது ஏற்கனவே ஒரு படத்தில் வந்த ஃபிளாஷ்பேக் என கிண்டல் அடித்து பதிவிட்டு வருகின்றனர்.