×

இதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பர்த்டே கிஃப்ட் - ரசிகர்களுக்கு கார்த்தி கோரிக்கை

 
karthi

நடிகர் சூர்யாவின் சகோதரர் கார்த்தி. அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை என ரவுண்டு கட்டி அடித்து ரசிகர்களின் மனதில் குடியேறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.  

இன்று கார்த்தி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! 

இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிக கடுமையாக உள்ளது. அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் அன்பு பரிசாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News