×

கல்லூரி வயதில் நான் அதிகம் இருந்த இடம் இதுதான்... கார்த்தி பகிர்ந்த புகைப்படம்...

 

நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும்,  சூர்யாவின் தம்பியுமான கார்த்தி ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே உச்சம் சென்றார்.  அதன்பின், பையா, சிறுத்தை, தம்பி என பல படங்கள் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார்.

தற்போது சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கல்லூரி பருவத்தின் போது பல்லவன் பேருந்தில் நண்பர்களுடன் எடுத்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து  ‘சென்னை மக்களுக்கு பல்லவன் ஒரு உண்மையான நண்பன். கல்லூரி காலத்தில் நான் அதிகம் நேரம் செலவழித்தது அங்குதான்’ என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News