×

திடீர் மூச்சுத் திணறல்... தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் கார்த்திக்

மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
திடீர் மூச்சுத் திணறல்... தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் கார்த்திக்

1990களில் முன்னணி நடிகராக வலம் வந்த கார்த்திக், சில காலம் நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வந்தார். பின்னர் தனுஷுடன் அனேகன் படம் மூலம் கம்பேக் கொடுத்த அவர், தொடர்ச்சிய சில படங்களில் நடித்து வந்தார். தனது மகன் கௌதம் கார்த்திக்குடன் மிஸ்டர் சந்திரமௌலி, தீ இவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். 


தனது நாடாளும் மக்கள் கட்சியைக் கலைத்த பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், சமீபத்தில் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கியிருந்தார். தேர்தல் சூழலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். 


பின்னர், அ.தி.மு.க - பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று மாலையில் அவருக்குத் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், அடையார் போர்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News