×

மு.க.ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் - கருணாஸ் பரபரப்புபேட்டி

 

ராமாநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. கடந்த 30ம் தேதி தேவரின் 113வது ஜெயந்தி விழா  மற்றும் 58வது குருபூஜை விழா நடைபெற்றது. எனவே, அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தரப்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அங்கு சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும், அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அப்போது, ஸ்டாலினுக்கு திருநீர் கொடுக்கப்பட்டது. ஆனால், அதை அவர் நெற்றியில் பூசாமல் கீழே போட்டுவிட்டார். இந்த சம்பவம் வீடியோவில் பதிவாது. இதையடுத்து #GoBackStalin மற்றும் #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

இந்நிலையில், ஸ்டாலினின் செயலுக்கு முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘திமுகவின் தாய் கட்சியான  திகவின் தலைவரான பெரியாரால் பாராட்டப்பட்டவர்  முத்துராமலிங்க தேவர். 1968ம் ஆண்டு குன்றக்குடி அடிகளார் அவருக்கு திருநீரை பூசிய போது அதை அவமதிக்காமல் ஏற்றுக்கொண்டார். மேலும், அதை அவதிப்பது மனித பண்பாக இருக்காது என ஆணித்தரமாக கூறினார் பெரியார். ஆனால், ஸ்டாலின் இப்படி செய்தது தவறு. இஸ்லாமியர்கள்  அணிவிக்கும் குல்லாவை ஏற்கும் அவர் திருநீரை உதாசீனப்படுத்தி முத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்திவிட்டார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்கவில்லை எனில் முக்குலத்தோர் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News