Connect with us
surya 1

Cinema News

அப்போ பொத்திகிட்டு இரு.. சூர்யா மீதான விமர்சனத்திற்கு கருணாஸ் காட்டம்

கங்குவா திரைப்படத்திற்கு பிறகு படத்தைப் பற்றியும் சூர்யாவை பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சூர்யாவின் கேரியரிலேயே கங்குவா திரைப்படம் தான் பெரிய நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்தது. இதைப்பற்றி திரைப்பட தயாரிப்பாளர்களும் அவரவர் கருத்துக்களை பகிர்ந்தனர். இவ்வாறு விமர்சனங்கள் எழுந்ததற்கு காரணமே youtube ரிவ்யூவர்ஸ்.

அதனால் ஒரு படம் வெளியாகிறது என்றால் இரண்டு வாரத்திற்கு படத்தை பற்றி எந்த ஒரு விமர்சனமும் செய்யக்கூடாது என யூடியூப்பர்ஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எழுந்தன. இப்படித்தான் இந்தியன் 2 திரைப்படத்தையும் வச்சு செய்தார்கள் என கூறினார்கள். அந்த அளவுக்கு கங்குவா திரைப்படத்தை கழுவி ஊற்றினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: சத்தமே இல்லாம பூஜைய முடிச்சுட்டீங்க போலயே?… வேற லெவல் லுக்கில் எஸ்.கே-சுதா கொங்கரா..!

ஆனால் இந்த படத்திற்காக இரண்டு வருட காலம் சூர்யா தன் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார் என்பதை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. இரண்டு வருடமாக தன்னுடைய கடின உழைப்பையும் முயற்சியையும் இந்த படத்திற்காகவே போட்டு இருக்கிறார் சூர்யா. படத்தில் அவருடைய நடிப்பு மிக நன்றாக இருந்தது.

ஆனால் அதைப் பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. இந்த நிலையில் நடிகர் கருணாஸ் அவருடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். ஏற்கனவே கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவை பற்றி மிகப் பெருமையாக பேசி இருந்தார் கருணாஸ். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகக்கூடிய நடிகர்களில் சூர்யா முன்னிலையில் இருப்பார் என பெருமையாக பேசி இருந்தார்.

இதையும் படிங்க: அதெப்படி திமிங்கலம் சாத்தியமாச்சு? அஜித் பற்றி சொல்றதுக்கு முன்னாடி யோசிங்க விக்கி..

ஆனால் கங்குவா படம் ரிலீஸ் ஆன பிறகு அவரை பற்றி எழுந்த விமர்சனத்திற்கு கருணாஸ் அவருடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது சூர்யா அவரின் அகரம் அறக்கட்டளை மூலமாக ஏகப்பட்ட மாணவர்களை உருவாக்கி வாராங்க. அதைப் பார்த்துட்டு எத்தனையோ பேர் அந்த அறக்கட்டளைக்கு நன்கொடையும் கொடுத்துட்டு வர்றாங்க.

அப்போ சூர்யாவை பிச்சை எடுக்குறாருனா சொல்வீங்க? அத எடுத்து மக்களுக்கு  அவர்களால் முடிஞ்ச உதவியை செய்றாங்க இல்ல. அத உன்னால செய்ய முடியல இல்ல. அப்போ பொத்திக்கிட்டு இரு என ஆவேசமாக பேசியிருக்கிறார் கருணாஸ்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top