×

தளபதி 65 படத்தில் கவின் நடிக்கிறாரா? - புகைப்படம் இதோ!. 

 
தளபதி 65 படத்தில் கவின் நடிக்கிறாரா? - புகைப்படம் இதோ!.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பின் சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 

தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தில் கவின் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.விஜயின் 65வது திரைப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் 

kavin

இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

kavin

இதில் படகுழுவினர் வரிசையில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவினும் நின்று கொண்டிருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது கவின் இப்படத்தில் நடிப்பார் என கருதப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News