Categories: Cinema News latest news

ரெண்டு பட ஹிட்டுக்கே இத்தனை கோடியா? கவின் கேட்கும் சம்பளத்தால் தெறித்தோடும் கோடம்பாக்கம்

Actor Kavin: தமிழ் சினிமாவில் ஒரு வளரும் இளம் தலைமுறை நடிகராக இருந்து வருகிறார் கவின். சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் சாண்டியுடன் இணைந்து கவின் அடித்த லூட்டி இணையத்தில் தாறு மாறாக பரவி ரசிகர்களை கவர்ந்தது. அதிலிருந்தே கவின் மீது வெள்ளித்திரை ஒரு கண் வைத்தது. அதனால் கிடைத்த வாய்ப்புதான் லிஃப்ட் திரைப்படம்.

இதையும் படிங்க: 70 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயன் சம்பளம் இவ்வளவா? படம் தரமா வருமா? புலம்பும் திரையுலகம்

அந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதுவரை சைக்கோ, பிசாசு போன்ற படங்களையே பார்த்த ரசிகர்களுக்கு இந்த லிஃப்ட் திரைப்படம் புதுமையான அனுபவத்தை கொடுத்தது. ஒரே நாளில் அதுவும் லிஃப்ட்டுக்குள்ளேயே முழு கதையையும் சுவாரஸ்யமாக கொண்டு போயிருந்தார் படத்தின் இயக்குனர்.

அந்தப் படத்தின் வெற்றி கவினுக்கு மேலும் பூஸ்டர் மாதிரி ஆனது. அடுத்ததான டாடா என்ற ஒரு அற்புதமான கதையில் கவின் நடித்தார். தியேட்டரில் டாடா படத்தை விமர்சையாக கொண்டாடினார்கள். இதில் கவினின் மார்கெட்டும் எகிறியது.

இதையும் படிங்க: டான்ஸ் கைவந்த கலை! அப்புறம் ஏன் பாட்டுனதும் ஓடிட்டாரு? கமல் நடிக்க மாட்டேனு சொன்ன படம் எதுனு தெரியுமா

இதற்கிடையில் சமீபகாலமாக சுந்தர் சியுடன் கவின் இணைந்து ஒரு படம் பண்ணப் போவதாகவும் ஆனால் அது வதந்தி என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் கவின் கேட்ட சம்பளத்தால்தான் சுந்தர் சியுடனான படம் பறிபோனதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்திற்கு கவின் கேட்ட சம்பளம் 6 கோடியாம். ஆனால் சுந்தர் சி 1.50 கோடி தருவதாக கூற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை.

அதனால் அந்தப் படத்தில் கவின் நடிக்காமல் போனதாக கூறப்படுகிறது. இதே போல் வெற்றிமாறன் ப்ரடக்‌ஷனிலும் கவின் நடிக்க வேண்டியதிருந்ததாம். அவரிடமும் கவின் 5 கோடி கேட்க வெற்றிமாறனோ கதை நல்ல கதை . ஒரு கோடி சம்பளம் என கூறியிருக்கிறார். அங்கு இருந்தும் கவின் வந்து விட்டாராம். இப்படியே போனால் கோடம்பாக்கத்தை ரவுண்ட் அடித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: போனிலேயே பாட்டு வரிகளை சொன்ன கண்ணதாசன்!.. எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் பாட்டு அதுதான்!..

Published by
Rohini