கழுகு கிருஷ்ணாவுக்கு பெண் குழந்தை பிறந்தது!.. சந்தோஷத்தில் வெளியிட்ட போட்டோவை பாருங்க!..
போதை வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா தொடர்ந்து தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது தனது குடும்பத்தில் புதிய உறுப்பினர் இணைந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
நடிகர் கிருஷ்ணா, இயக்குநர் விஷ்ணுவர்தன் அவர்களின் சகோதரராக இருந்தாலும், தனது திறமையால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். கழுகு, யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். கடந்த ஆண்டு கிருஷ்ணா, கேரளாவில் பதிவான போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட கிருஷ்ணா, பின்னர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணாவை நேரில் ஆஜராக அழைத்து விளக்கம் பெற்றனர். மேலும், சிறையில் உள்ள கிருஷ்ணா தரப்பில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு ரீலிஸாகியுள்ளார்.
அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவைத் தொடர்ந்து ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கிருஷ்ணாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வேகமாக பரவி வருவதுடன், ரசிகர்கள் "குட்டி இளவரசிக்கு வரவேற்பு" என வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
குடும்ப வாழ்க்கையிலும் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள கிருஷ்ணாவுக்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. தனது மகளின் பிறப்பால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் நடிகருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திரை வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
