Categories: Cinema News latest news throwback stories

மைனா படத்துல நடிக்க வேண்டியது அந்த ஹீரோ…அட இது தெரியாம போச்சே!….

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் பிரபு சாலமன். இவரின் இயக்கத்தில் வெளியான மைனா, கும்கி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் படமாகியது.

குறிப்பாக மைனா திரைப்படம்தான் பிரபுசாலமனை திரும்பி பார்க்க வைத்தது. அப்படம் மூலமாகத்தான் அமலாபாலும் ரசிகர்களிடம் பிரபலமானார். இப்படத்தில் ஹீரோவாக வித்தார்த் நடிக்க, தம்பி ராமையா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் பெற்றார். ஒரு நாளில் கதை நடக்கும்படி திரைக்கதை அமைத்திருந்தார் பிரபுசாலமன்.

உண்மையில் இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் கிருஷ்ணாதானாம். இவர் கழுகு, கழுகு 2, யாமிருக்க பயமேன், மாரி 2 உள்ளிட்ட சில பல படங்களில் நடித்துள்ளார். இவரிடம் பிரபுசாலமன் இப்படத்தில் நடிப்பது பற்றி பேச, ‘ படத்தின் கதையை சொல்லுங்கள், அப்போதுதான் என்னை தயார் படுத்துக்கொள்வேன்’ என கிருஷ்ணா கூறியுள்ளார். இது பிரபுசாலமனுக்கு பிடிக்கவில்லை போல. அதன்பின் விதார்த்தை வைத்து நடிக்க வைத்தார். இந்த தகவலை சமீபத்தில் அளித்த பேட்டியில் கிருஷ்ணா கூறியுள்ளார்.

சில இயக்குனர்களுக்கு ஹீரோ கதையை கேட்டால் பிடிக்காது. நான் சொல்வதை கேட்டு நடி என்கிற மனநிலையிலே இருப்பார்கள். ஆனால், ரஜினி, கமல்,விஜய், அஜித், சூர்யா,தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி மற்றும் பெரிய ஹீரோக்களிடம் முழுக்கதையையும் கூறிவிட்டுதான் படம் இயக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா