raghava
ஜெய்லர் படம் ரிலீஸாகி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் செம ட்ரீட் வைத்திருக்கிறார் நெல்சன். படம் பார்த்த அத்தனை பேரும் படு உற்சாகத்தில் இருக்கிறார்கள். நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு மாஸான ரஜினியை இந்தப் படத்தின் மூலமாக பார்க்கிறோம் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ஜெய்லர். இந்தப் படம் உலகெங்கிலும் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மீண்டும் ரஜினியும் நெல்சனும் ஒன்று சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோளும் வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ஜெயிலர் படம் வொர்ஸ்ட்!.. ஃபேக் ஐடியில் வன்மம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. இதெல்லாம் ஒரு பொழப்பா!…
கமலுக்கு எப்படி ஒரு விக்ரமோ அதே போல ரஜினிக்கும் இந்த ஜெய்லர் திரைப்படம் மிகப்பெரிய பெருமையை பெற்றுத்தந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். ரஜினியுடன் சேர்ந்து சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் இவர்களின் நடிப்பும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
raghava1
நல்லவேளை ரஜினி நேற்றே இமயமலை சென்றுவிட்டார். இல்லாவிடில் அவரை பார்ப்பதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் அவரது வீட்டின் முன்புதான் கூடியிருக்கும். இது தெரிந்தேதான் முன்னதாகவே ரஜினி புறப்பட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் ஜெய்லர் படத்தை பார்ப்பதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் திரையரங்கிற்கு வர அவரை சுற்றி வளைத்து கொண்டனர் ரசிகர்கள். ஏற்கெனவே ரஜினி வெறியனாக இருப்பவர் ராகவா லாரன்ஸ். அவர் ஜெய்லர் திரைப்படத்தை பார்ப்பதற்கு முதல் ஆளாக வந்திருந்தார்.
இதையும் படிங்க : மரண மாஸ் தலைவர்!.. ஜெயிச்சிட்டியே நெல்சா!.. ஜெயிலர் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்…
படம் பார்த்ததும் ஜெய்லர் திரைப்படம் எப்படி இருக்கிறது என நிரூபர் கேட்க அதற்கு லாரன்ஸ் ‘டபுள் பாட்ஷாவாக இருக்கிறது’ என சந்தோஷத்தில் கூறி திகைத்தார்.
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…
வடிவேலுவின் கோபம்…