Categories: Cinema News latest news throwback stories

கேப்டன்கிட்ட இருந்து மன்சூர் அலிக்கானுக்கு வந்த பழக்கம்! – அவ்வளவு தங்கமான மனசா இவருக்கு?

தமிழில் வில்லனாக நடித்து வந்த நடிகர்களில் முக்கியமானவர் மன்சூர் அலிக்கான். 1990களில் மன்சூர் அலிக்கான் திரையில் வந்தாலே பார்ப்பவர்களுக்கு பயம் வரும். அந்த அளவிற்கு பெரும் வில்லனாக நடித்தவர்.

தற்சமயம் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். என்னதான் தமிழ் சினிமாவில் டெரரான வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர் மன்சூர் அலிக்கான்.

சினிமா வட்டாரத்தில் சம்பள பிரச்சனை என்பது எப்போதும் இருக்கும். பெரும் நடிகர்கள், இயக்குனர்களே சரியாக சம்பளம் வரவில்லை என புலம்பும் நிலை இங்கே இருக்கிறது. இந்த நிலையில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள், கேமிராமேன் என அனைவருக்கும் சரியான சம்பளம் வருவது கடினமான விஷயம் என கூறப்படுகிறது.

அதே சமயம் வேலையாட்கள் அனைவருக்கும் சரியான சம்பளம் கொடுப்பவர்களும் உண்டு. அதில் முக்கியமானவர் விஜயகாந்த். குறித்த சம்பளத்தை வேலையாட்களுக்கு தர வேண்டும் என்பதை ஒரு விதிமுறையாக பின்பற்றி வந்தார் விஜயகாந்த்.

இதை பார்த்த மன்சூர் அலிகான், அவர் தயாரித்த திரைப்படங்களிலும் கூட இந்த விதிமுறையை பின்பற்றினார். மன்சூர் அலிக்கான் படப்பிடிப்பு துவங்கும்போதே அனைத்து தொழிலாளர்களிடமும் சம்பளம் குறித்து தெளிவாக பேசிவிடுவார். பேசிய சம்பளத்தையும் சரியாக கொடுக்க கூடியவர். இதற்காக பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

Published by
Rajkumar