கங்குவா படத்துல எனக்கு நேர்ந்த கொடுமைகள்.. மன்சூர் அலிகான் ஆதங்கம்
தமிழ் சினிமாவில் மிரட்டும் வில்லனாக தன்னுடைய முதல் படத்திலேயே அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் அறிமுகமான மன்சூர் அலிகான் தொடர்ந்து வில்லனாக பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துக் கொண்டார். அவருடைய வித்தியாசமான பேச்சு முகபாவனை என ஒரு மாறுபட்ட வில்லத்தனத்தை வெளிப்படுத்தினார்.
சமீப காலமாக அவர் பெரும்பாலும் படங்களில் நடிப்பதில்லை. லியோ படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மன்சூர் அலிகான். நீண்ட வருடங்களுக்கு பிறகு அந்த படத்தில் நடித்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் சொல்லிக் கொள்ளும்படி அவருடைய கதாபாத்திரம் பேசப்படவில்லை. இந்த நிலையில் தன்னை சப்பையாக படத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார் மன்சூர் அலிகான்.
அதாவது கங்குவா படத்தில் தான் நடித்ததாகவும் கதாநாயகியை கடத்தி வைத்து ஒரு சீன் மற்றும் கோவாவில் சில சீன்கள் தன்னை வைத்து எடுக்கப்பட்டதாகவும் ஆனால் படத்தில் ஒன்றுமே இல்லை. தன்னுடைய தலையை ஆங்காங்கே மட்டும் காட்டுகிறார்கள். அது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. இது எனக்கு நேர்ந்த கொடுமை என கங்குவா படத்தில் நடித்ததை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் மன்சூர் அலிகான்.
மன்சூர் அலிகானை பொறுத்தவரைக்கும் எதையும் ஓப்பனாக தைரியமாக பேசக் கூடியவர். அவர் பேச்சில் ஒரு நியாயம் இருந்தாலும் அவர் மீது கோடம்பாக்கத்தில் அக்கறை இல்லாததை போலத்தான் தெரிகிறது. ஏதோ பேசுவார் மன்சூர், அதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்பதை போலத்தான் மற்றவர்களின் ரியாக்ஷன் இருக்கிறது. அந்த வகையில்தான் இப்போதும் கங்குவா படத்தில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்தும் பேசியிருக்கிறார்.