Categories: Cinema News latest news

திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய பிரபல நடிகரின் மரணம்.. உடல் நலக் குறைவால் காலமான காமெடி நடிகர்..

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. தாவணிக்கனவுகள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின் கன்னி ராசி, நான் அவனில்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

mayilsamy

சினிமாவையும் தாண்டி பொது நல விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கினார். சமீபத்தில் உதய நிதியுடன் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டவரும் கூட.

நடிப்பையும் தாண்டி மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாகவும் வலம் வந்தார் மயில்சாமி. தீவிர சிவபக்தரான மயில்சாமி நேற்று சிவராத்திரி என்பதால் கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வீடு திரும்பியிருக்கிறார். வீடு திரும்பும் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம்.

mayilsamy

அதன் பிறகே காலமாயிருக்கிறார். இதை அறிந்த திரையுலகினர் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். 57 வயதே ஆன மயில்சாமியின் மரணம் சினிமா ரசிகர்களையும் தாண்டி அவருடன் நடித்த சக நடிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Published by
Rohini