Categories: Cinema News latest news

என்ன சார்…பொசுக்குனு இப்படி சொல்லிடீங்க…சந்திரமுகி2வை பங்கமாய் கலாய்த்த மீசை ராஜேந்திரன்…

இயக்குனர் வாசுவின் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம்தான் சந்திரமுகி2 திரைப்படம். இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜோதிகா, பிரபு, நயன் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது. இப்படத்தின் வெற்றிக்கு இதில் நடித்த வடிவேலுவும் ஒரு காரணம் என கருத்துகள் உலாவின.

இதையும் வாசிங்க:சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைக்க ரெடியாகும் பாலா… அப்போ தயாரிப்பாளர் தலைல துண்டுதானா…

முருகேசா எனும் கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் காமெடிகள் அனைவரையும் சிரிக்க வைத்தது. முதல் பாகம் போலவெ இரண்டாம் பாகத்திலும் இவர் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். ஆனால் முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு இப்படத்தில் இவரின் காமெடிகள் இல்லை எனவும் ஒரு கருத்துகள் உலாவுகின்றன.

சினிமாவில் வில்லனாக நடிக்கும் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் இப்படம் குறித்த கருத்தினை பதிவிட்டுள்ளார். அதன்படி சந்திரமுகி திரைப்படம் என்றாலே அது ரஜினி சார்க்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும். ரஜினியைபோல் வேறு எந்த நடிகரும் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க:ரசிகர்களை காப்பாத்த இறைவன்தான் வரணும்! – ஜெயம் ரவின் ‘இறைவன்’ பட விமர்சனம் இதோ!…

ராகவா லாரன்ஸ் ரஜினி போல் நடிக்க முடியாது. அவர் தனது இயல்பான நடிப்பைதான் இப்படத்தில் வெளிகாட்டியுள்ளார் என கூறியுள்ளார். மேலும் இப்படம் அவரின் கண்ணோட்டத்தில் வெறும் சீரியல் போல்தான் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் அப்போது இருந்த வடிவேலு வேறு இப்போது உள்ள வடிவேலு வேறு என குறிப்பிட்ட மீசை ராஜேந்திரன் வடிவேலுவாலேயே இப்படம் தோல்வி அடையும் என மிகவும் ஆணித்தனமாக கூறியுள்ளார். ஆனால் படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் வாசிங்க:யாருக்கும் தெரியாமல் தனியாக வாழும் ஜனகராஜ் – இப்ப எப்படி இருக்காருனு பாருங்க

amutha raja
Published by
amutha raja