Categories: Cinema News latest news

விஜய்க்கு வில்லனா?!.. கறாக மறுத்த மைக் மோகன்.. அட அந்த படத்துக்கா?!..

80களில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக கலக்கியவர் நடிகர் மோகன். இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் மைக்கை பிடித்துக்கொண்டு பாட்டு பாடுவார் என்பதால் இவருக்கு மைக் மோகன் என பெயர் வந்தது. பல வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். ஒரு வருடத்தில் அதிகமான படங்களில் நடித்த நடிகராகவும் மோகன் இருந்தார். பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்தவர் இவர். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் நெகட்டிவ் ஹீரோ மற்றும் வில்லன் வேடங்களிலும் கலக்கியவர் இவர்.

Mohan

90களுக்கு பின் இவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனது. கடைசியாக இவர் ஹீரோவாக நடித்த ‘சுட்ட பழம்’ திரைப்படம் 2008ம் வருடம் வெளியானது. கடந்த 15 வருடங்களாக அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இப்போது ‘ஹரா’ என்கிற படத்தில் பத்திரிக்கையாளராக நடித்து வருகிறார். இப்படம் தொடர்பான அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது.

Mike Mohan

கடந்த 15 வருடங்களில் அவருக்கு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் அதாவது ஹீரோவின் அப்பா, அண்ணன், வில்லன் என வேடங்கள் அவரை தேடி வந்தது. ஆனால், நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறிவிட்டார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், இப்போதும் நான் ஹீரோதான் என சொல்லி மறுத்துவிட்டாராம். அதேபோல், வாரிசு படத்திலும் விஜயின் அண்ணன்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால், அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா