வில்லனாக வந்த என்னை காமெடியனாக்கிவிட்டார்கள் - முனிஷ்காந்த்
முண்டாசுபட்டி படம் மூல அறிமுகம் ஆனவர் முனிஷ்காந்த். முதல் படத்திலேயே அவரது காமெடி அனைவராலும் ரசிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மணிரத்னம் இயக்கிய கடல், பீட்சா உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். முண்டாசுபட்டி படம்தான் அவருக்கான அடையாலத்தை பெர்ற்று தந்தது. தொடர்ந்து மாநகரம், ராட்சசன், மரகத நாணயம், தாய்கிழவி உள்ளிட்ட பப்ல படங்களில் காமெடியில் அசத்தியுள்ளார். மிடில் கிளாஸ் படம் மூலம் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் முனிஷ்காந்த் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தான் திரையுலகிற்கு வந்த சம்பவத்தை பகிர்ந்திருந்தார். அவர் கூறியபோது, நான் வில்லனாக நடிக்க வேண்டும் என்றுதான் சினிமாவிற்கு வந்தேன். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தேன். முண்டாசுபட்டி படத்தில் வாய்ப்புக்காக சென்றபோது அப்பட இயக்குனர் ராம்குமார் நீங்கள் காமெடி கேரக்டரில் நடிங்கனு சொன்னார். என்னைப் பார்த்து யார் சிரிப்பார்கள் என்று கூறினேன். அதற்ற்கு அவர் சரியாக இருக்கும் பண்ணுங்கனு சொன்னார். அந்த படத்தில் காமெடி செமையாக ஒருகவுட் ஆனது. அப்போதுதான், ஒரு இயக்குனர் நினைத்தால் எந்த கேரக்டரையும் பண்ன வைக்க முடியும் என்று புரிந்தது என்றார்.
