கொழு கொழு பாப்பா... மகளுடன் நகுல் வெளியிட்ட கியூட் போட்டோ!

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் தனது குண்டு உடலை குறைத்து ஸ்லிம் ஆகி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமன்றி பாடுவதிலும் திறமைமிக்கவராக இருந்து வரும் நகுல் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகராக இருந்துள்ளார்.
அதையடுத்து சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவர் தனது நெருங்கிய தோழி ஸ்ருதி என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது மகளை கையில் வைத்து கட்டியணைத்துக்கொண்டிருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். பாப்பா அகிரா கொழு கொழுன்னு குல்ஃபி போன்று அம்புட்டு அழகாக இருக்கிறார்.