×

அப்பாவானார் நடிகர் நகுல்.... பிறந்தநாளில் சர்ப்ரைஸ் பதிவு!

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் தனது குண்டு உடலை குறைத்து ஸ்லிம் ஆகி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

நடிப்பு மட்டுமன்றி பாடுவதிலும் திறமைமிக்கவராக இருந்து வரும் நகுல் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகராக இருந்துள்ளார். தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் நகுல் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். "  இந்த பிறந்தநாள் எனக்கும், என் மனைவிக்கும் ரொம்ப ஸ்பெஷல். இந்த நேரத்தில், எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். உங்கள் ஆசிர்வாதங்கள், வாழ்த்துக்களும் எங்களுக்கு வேண்டும்'' என பதிவிட்டுள்ளார். எதிர்பாராத நேரத்தில் குட் நியூ சொன்ன நகுல் - ஸ்ருதி தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News