பல்லாயிரம் இன்பங்கள்... பாப்பாவுக்கு கண்ணு படுது சுத்தி போடுங்க நகுல்!

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் தனது குண்டு உடலை குறைத்து ஸ்லிம் ஆகி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமன்றி பாடுவதிலும் திறமைமிக்கவராக இருந்து வரும் நகுல் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகராக இருந்துள்ளார். இருந்தும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவர் தனது நெருங்கிய தோழி ஸ்ருதி என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
கடந்த வருடம் இவர்களுக்கு அகிரா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் புத்தாண்டு அன்று குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நகுல் "இந்த புதிய துவக்கத்தால் உண்டாகும் பல்லாயிரம் இன்பங்களை குதூகலத்தோடு கொண்டாடுங்கள்! " என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதில் நகுல் மகளின் அழகிய சிரிப்பு அனைவரையும் கவர்ந்துவிட்டது.