இவர பார்த்துதான் நெப்போலியனுக்கு சினிமா ஆசை வந்துச்சாம்! - அட ஆச்சர்யமா இருக்கே!...
Wed, 23 Dec 2020

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகன், குணசித்திர வேடங்கள் என பல படங்களில் நடித்தவர் நடிகர் நெப்போலியன். தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ என்னுடைய இளமை வயதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடித்த படம் ஒன்றை பார்த்தேன். அட உயரம், முக அமைப்பு என நம்மை போலவே இருக்கிறாரே என நினைத்தேன். என்னுடன் படம் பார்த்த நண்பர்களும் ‘உன்னைப்போலவே இருக்கும் அவர் பெரிய நடிகர் ஆகிவிட்டார். நீயும் முயற்சி செய். சினிமாவில் சேர்ந்து பெரிய ஆள் ஆகிவிடலாம்’ எனக்கூறினார்கள். அதன் பின்னர்தான் எனக்கு நடிக்கும் ஆசை ஏற்பட்டது. பாராதிராஜாவை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். அவர் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் என்னை நடிகனாக மாற்றினார்’என தெரிவித்தார்.