Connect with us
karthi

Cinema News

கார்த்தி மாதி்ரி ஒருத்தன் சான்ஸே இல்ல! யார்கிட்டயும் நான் பார்த்ததில்ல!.. நெகிழும் நெப்போலியன்!..

Actor karthi: புது நெல்லு புது நாத்து படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நெப்போலியன். கிராமத்து முரட்டு இளைஞன் வேடத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்துவார். இவர் நடித்த 90 சதவீத படங்கள் கிராமத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவைதான். சீவலப்பேரி பாண்டி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘கிழக்கு சிவக்கையிலே’ பாடல் இப்போதும் பலரின் ஃபேவரைட்டாக இருக்கிறது. நெப்போலியன் படம் என்றால் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலும் வேட்டை, சட்டை அணிந்து கொண்டே நடிப்பார். கமல்ஹாசனின் விருமாண்டி மற்றும் தசாவதாரம் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: Lubber Pandhu: படம் ஹிட்டுனா கிஃப்ட் கொடுப்பாங்க! லப்பர் பந்து பட இயக்குனருக்கு நேர்ந்த சோகம்.. பெரிய மோசடி

தன் மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக அமெரிக்காவிலேயே போய் செட்டில் ஆகிவிட்டார். அங்கே சில நூறு ஏக்கர் நிலம் வாங்கி அதில் பயிரிட்டு முழு விவசாயியாக மாறியிருக்கிறார். சமீபத்தில்தான் அவரின் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் சில முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவில் இருந்தாலும் நல்ல வேடம் எனில் இந்தியா வந்து நடிப்பது நெப்போலியனின் வழக்கம். சிவகார்த்திகேயனுடன் சீமத்துரை, கார்த்தியுடன் சுல்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். ஊடகம் ஒன்றில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்தது பற்றி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

karthi

#image_title

‘இந்த வேடத்தில் நீங்கள் நடித்தால் மட்டுமே சரியாக இருக்கும்’ என கார்த்தி என்னிடம் சொல்லி நடிக்க வைத்தார். மிகவும் ஒழுக்கமான பையன். கார்த்தி, சூர்யா இரண்டு பேரையும் அவரின் அப்பா சிவக்குமார் நன்றாக வளர்த்திருக்கிறார். இருவருமே மிகவும் பணிவாக பேசுவார்கள். சுல்தான் படப்பிடிப்பு முடிந்து நான் அமெரிக்கா கிளம்பி கொண்டிருந்தேன்.

அப்போது என்னை வழியனுப்ப என் அறைக்கே வந்துவிட்டார் கார்த்தி. எங்களுக்காக அமெரிக்காவில் இருந்து வந்து நடித்து கொடுத்தற்கு நன்றி என சொல்லியதோடு என்னை வழியனிப்பி விட்டே போனார். சினிமாவில் அப்படி யாரையும் நான் பார்த்ததே இல்லை’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார் நெப்போலியன்.

நெப்போலியன் மகன் தனுஷின் திருமணத்திலும் கார்த்தி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா தனுஷால் என்னை பழி வாங்கிய பிருந்தா மாஸ்டர்… ஆர்ஜே பாலாஜி கொடுத்த ஷாக்

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top