தமிழ் சினிமாவில் வில்லன்,தந்தை , ஹீரோ என எல்லா கதாபாத்திரங்களில் நடித்து கலக்க கூடிய ஒரு நடிகர் என்றால் நாசர் என்று கூறலாம். இவரது நடிப்பில் வெளியான விருமாண்டி, எம்மகன் ஆகிய படங்கள் இவரின் நடிப்பின் பரிமாணத்தை எடுத்துக்காட்டி இருக்கும். அந்த அளவிற்கு ஒரு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
64 வயதான நாசர் இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார். அவர் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகியும் கூட அவருக்கு முன்னதை போல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில், நாசருக்கு படப்பிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்களேன்- நான் சின்ன வயசுல ஆசைப்பட்ட வேலை வேறு.. ஆனால் முடியல.! மேடையில் வருந்திய சியான் விக்ரம்.!
ஆம், நடிகர் நாசர் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கான படப்பிடிப்பு தெலுங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெற்று வந்துள்ளது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி நாசர் சற்று காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் நாசருக்கு விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரிதாக அவருக்கு காயம் ஏற்படவில்லை என நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…