×

கனவு நிறைவேறியது.. வில்லனாக மிரட்டும் அறிமுக நடிகர் நிமல்....

 

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வந்தாலும் வில்லன் நடிகர்களில் சிலரே ரசிகர்களின் மனதில் குடிபுகுவார்கள். அந்த ஆசையோடு தமிழ் சினிமாவில் களம் இறங்கியிருப்பவர்தான் நிமல்.

சினிமா ஆசையில் சென்னை வந்தவர் நடிகர் மற்றும் இயக்குனர் டி.பி.கஜேந்திரனிடம் அடைக்கலம் ஆனார். தற்போது கால் ‘டாக்ஸி’ என்கிற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

nimal

சமீபத்தில் நிமல் அளித்த பேட்டியில் கூறியவதாவது:

சின்ன வயது முதலே சினிமாவில் நடிப்பது என் ஆசையாக இருந்தது. எனவே, சில வருடங்களுக்கு முன்பு சென்னை வந்தேன். சினிமாவில் எனக்கு கஜேந்திரன் சாரை தவிர யாரையும் தெரியாது. அவரிடம் சென்றேன். முதலில் சினிமாவை கற்றுக்கொள் அதன்பின் நடிக்கலாம் எனக்கூறி அவர் இயக்கும் படங்களின் தயாரிப்பு பணிகளை செய்ய சொன்னார்.

தற்போது அனைத்தையும் கற்றுக்கொண்டேன். அவர்தான் என் குரு. தற்போது ‘கால் டாக்ஸி’ என்கிற படத்தில் வில்லனாக நடித்திருக்கிறேன். இப்படத்தை பா. பாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும், அருணை பாலா என்பவரின் இயக்கத்தில் ‘அட்லி’ என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளேன். அதேபோல், ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் வி.எஸ்.செல்வதுரை என்பவரின் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறேன் என அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News