எந்திருச்சி வெளிய போயா!.. மிஷ்கினிடம் கோபம் காட்டிய அந்த நடிகர்!. அட அந்த படத்துக்கா!..
Director Mysskin: தமிழ் சினிமாவில் வித்தியாசமாக படமெடுப்பர் மிஷ்கின். ஜப்பான் மொழி படங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளதால் அவரின் படங்களில் சில காட்சிகளில் அந்த பாதிப்பு அப்படியே இருக்கும். இவர் இயக்கி நடித்த நந்தலாலா திரைப்படமே ஒரு ஜப்பான் படத்தில் ரீமேக்தான். ஆனால், அதை அவர் வெளியே சொல்லவில்லை. அந்த படத்திற்கு இசையமைத்த இளையராஜாவுக்கு கூட அவர் சொல்லவில்லை.
பின்னர் அதுபற்றி தெரிந்து இளையராஜா மிஷ்கினிடம் கோபப்பட்டதும் நடந்தது. அதேபோல், சைக்கோ படத்தில் வேலை செய்யும்போதும் இளையராஜாவுடன் மிஷ்கினுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவேதான் அடுத்து இயக்கிய பிசாசு 2 படத்தில் கார்த்திக் ராஜா இசையமைத்தார்.
மிஷ்கினுக்கு ஓரளவுக்கு இசை ஞானம் உண்டு. ஒரு படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார். எனவே, இசையமைப்பாளரிடம் ‘அப்படி வேண்டும்.. இப்படி வேண்டும்’ என எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார். பிசாசு 2 உருவானபோதும் இது நடந்தது. எனவே, கார்த்திக் ராஜா ரிக்கார்டிங் தியேட்டருக்கே வரவில்லை. எனவே, மிஷ்கினே இந்த படத்திற்கு கம்போஸ் செய்தார் என சொல்கிறார்கள்.
சினிமாவில் புதிதாக எதையும் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை மிஷ்கினுக்கு உண்டு. தைரியமாக சில பரிசோதனை முயற்சிகளை செய்து பார்ப்பார். அப்படித்தான் யுத்தம் செய் படத்தில் சேரனை நடிக்க வைத்திருப்பார். அதற்கு முன் சேரன் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததே இல்லை. அதேபோல், அந்த படத்தில் ஒரு பாடலுக்கு இயக்குனர் அமீரை நடனமட வைத்திருப்பார்.
அதேபோல், அஞ்சாதே படத்தை இயக்கியபோது இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜனை அணுகி ‘இந்த படத்தில் நீங்கள் வில்லனாக நடிக்க வேண்டும்’ என கேட்க அவரோ ஆடிப்போய்விட்டார். ஏனெனில், பாண்டியராஜ் காமெடி நடிகராக பார்க்கப்படுபவர். அவரை கொடூரமான வில்லனாக பார்க்க மிஷ்கினால் மட்டுமே முடியும்.
பாண்டியராஜன் அதற்கு சம்மதிக்கவில்லை. ஒருவழியாக அவரை சமாதனம் செய்து சம்மதிக்க வைத்த மிஷ்கின் ‘இந்த படத்திற்காக நீங்கள் மீசை எடுக்க வேண்டும்’ என சொல்ல சூடான பாண்டியராஜன் ‘எந்திருச்சி வெளியா போயா.. இதுவரை நான் மீசையே எடுத்ததில்லை’ என கொதிக்க அவரை மீண்டும் சமாதானம் செய்து மீசை எடுக்க வைத்து அந்த படத்தில் நடிக்க வைத்தார் மிஷ்கின்.