×

துக்ளர் தர்பார் மூலம் சீமானைச் சீண்டுகிறாரா விஜய் சேதுபதி?  பார்த்திபன் சொல்லும் லாஜிக்

விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த `துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. 
 

புதுமுக இயக்குநர் டெல்லிபிரசாத் தீனதயாள் இயக்கியுள்ள துக்ளக் தர்பார் படம் விரைவில் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. படத்தின் டீசர் வெளியாகியிருக்கும் நிலையில், அதற்கு சீமானின் நாம் தமிழர் கட்சி கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது. 

இலங்கைத் தமிழரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 படத்தின் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நாம் தமிழர் கட்சியும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், அந்தப் படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
 


இந்தநிலையில், சீமானைப் பழிதீர்க்க துக்ளக் தர்பார் படத்தில் `ராசிமான்’ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் நடிக்க இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தநிலையில், துக்ளக் தர்பார் சர்ச்சை தொடர்பாக சீமானை நேரடியாகத் தொடர்புகொண்டு நடிகர் பார்த்திபன்
விளக்கமளித்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பார்த்திபன், ``நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல.  (புதிய பாதை நமது)இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்’நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன்.எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர்பிரச்சனையை இயக்குனரிடம் கூறி,ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News